ஆன்மிக இரகசியங்கள் (கேள்வி பதில்) இரண்டாம் பாகம்

ஆன்மிக இரகசியங்கள் (கேள்வி பதில்) இரண்டாம் பாகம்
இந்நூலின் முதற் பகுதியில் சித்த யோகத்தின் தோற்றம், சித்தர்கள் வாழ்ந்த காலம், தமிழ் மொழியின் தோற்றம், தமிழ்ச் சங்கம், சித்த யோகத்தின் சிறப்பான தனி வழிமுறைகள். அகத்தியர், குண்டலினி சித்தி, சித்த யோகத்தின் முறைகள், சித்த மருத்துவம், நவபாஷாணம், காய கல்பம், அஷ்டமா சித்திகள், மற்றும் மகா புருஷயோகம் ஆகியவை விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இரண்டாம் பகுதியில் மனித தேகத்தின் ‘மெய்’ எனப் போற்றப்படும் தோல் பகுதியில் உணர்வாக புதைந்திருக்கும் பஞ்ச ஆகாசங்களான “பூதாகாசம், பிரணவாகாசம், சித்தாகாசம், பரமாகாசம், அறிவாகாசம்” ஆகிய நிலைகள் விவரிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் பகுதியில் மனித தேகத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும் பஞ்சகோசங்களான “அன்னமயகோசம், பிராணமய கோசம், மனோன்மய கோசம்,ஆனந்தமய கோசம், விஞ்ஞானமய கோசம்” மற்றும் அதன் சிகரத்தில் உதயமாகும் ‘அமர கோசம்’ ஆகியவற்றின் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. நான்காம் பகுதியில் அக்னியின் தோற்றம், நம்முடைய பூமியில் திட, திர, வாயுவின் ரூபத்தில் கலந்திருக்கும் அக்னியே மனித மதகத்தின் அனல் சக்தியாக ஓடிக் கொண்டிருக்கும் பஞ்சாக்னிகள் என்றைழைக்கப்படும் “ஜாடாராக்னி, காயாக்னி, காலாக்னி, காமாக்னி, மூலாக்னி, யோகாக்னி, வடவாக்னி” எஉ விளக்கப்பட்டுள்ளன. ஐந்தாம் பகுதியில் சித்த யோக மார்க்கத்தின் யோக சித்திகளாக போற்றப்படும் சூரிய கலை, சந்திர கலை, அக்னி கலையின்; விளக்கங்கள் மற்றும் சித்த விருத்தி, ஆத்ம விரகாசம், சொரூப நிலை, பிரம்ம நிஷ்டை, அமரவாக்கு, பிரம்ம ரந்திரம் மற்றும் பூர்த்தியாக சகஜ நிஷ்டையின் யோக மார்க்கம் என சுமார் 865 கேள்விகளுக்கு மேல் விரிவான விடைகள் எடுத்துச் சொல்லப்பட்டு இப்புத்தகம் இனிதே நிறைவு காண்கிறது. எல்லாம் வல்ல கணநாதனின் திருவடியே போற்றி! சித்த யோகத்தின் அதிபதியான ஞான பண்டிதன் ஷண்முகநாதன் தாள் மலர் யோற்றி!! அமரகவி சித்தேஸ்வரர் மலர் தாள் போற்றி போற்றி!!!
ஆன்மிக இரகசியங்கள் (கேள்வி பதில்) இரண்டாம் பாகம் - Product Reviews
No reviews available