ட்விட்டர் மொழி

0 reviews  

Author: ஆல்தோட்ட புபதி

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  100.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ட்விட்டர் மொழி

“தோட்டா“ என்ற புனைப்பெயரில் டிவிட்டரில் இயங்கிவரும் பிரபலம் இவர். இவரது கீச்சுகளின் தொகுப்பு

சமூக வலைத்தளங்களில் ஆர்க்குட் என்பதை கிரிக்கெட்டின் டெஸ்ட் மேட்ச் போலவும், ஃபேஸ்புக் என்பதை ஒரு நாள் மேட்ச் போலவென்றும், ட்விட்டர்  என்பதை ட்வென்ட்டி 20 என்றும் சொல்லலாம். ட்விட்டரில், 140 எழுத்துக்குள் நமது கருத்தைச் சொல்லிவிட வேண்டும். இந்த சவால்தான் பலருக்கும் மிகுந்த சுவாரஸ்யத்தைத் தந்தது.
சொல்லப்போனால் நம்மை தமிழ்த் தேர்வில் 10 மதிப்பெண்களுக்காக பாடாய்ப் படுத்தும் திருவள்ளுவர்தான் முதல் ட்வீட்டர். திருக்குறளின் அளவும் ட்வீட்களின் அளவும் கிட்டத்தட்ட ஒன்றுதான். பொன்மொழிகளாகவும் காலண்டர் தத்துவங்களாகவும் நாம் அறிந்தவற்றைத் தாண்டியவை ட்விட்டரில் பகிரப்படும் பல தகவல்கள். நம் சிந்தனையை பல விதங்களில் விரியச் செய்வதும், வாய்விட்டு சிரிக்கச் செய்வதும் இந்த ட்வீட்களில் சாத்தியம். ‘ஆல்தோட்ட பூபதி’ என்ற பெயரில் ட்விட்டரில் ஆயிரக்கணக்கான பதிவுகளை
இட்டிருக்கும் தோட்டா ஜெகனின் தேர்ந்தெடுத்த பதிவுகள் இந்த நூலில் உள்ளன. சாம்பிளுக்கு சில...  
•    அழைப்பு வந்தால் எல்லோரையும் ஓரிடத்தில் கூட வைத்தது தொலைபேசி; அழைப்பு வந்தால் தனித்தனியே ஓட வைக்கிறது அலைபேசி!
•    ஆழ்ந்த தூக்கநிலைக்குச் செல்ல ஆங்கிலேயன் அனஸ்தீஸியா கண்டுபிடித்தான்; ரசனையான தமிழன் பொங்கலும் கெட்டி சட்னியும் கண்டு பிடித்தான்!
•    மனைவிகள் கேட்கும் கேள்விகளுக்கு கூகுளில் கூட விடை கிடையாது!
•    எதிரியை விட நண்பனே அதிகம் பொறாமைப்படுகிறான்..!
•    கோரிக்கைகளுடன் மட்டும் கடவுளைக் காணச் சென்று, கடவுளையும் எம்.எல்.ஏவாக்கிவிட்டோம்!

ட்விட்டர் மொழி - Product Reviews


No reviews available