தகராறு

0 reviews  

Author: சுப.உதயகுமாரன்

Category: கட்டுரைகள்

Out of Stock - Not Available

Price:  85.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

தகராறு

 இரு மனிதர்களுக்கிடையே அல்லது இரு குழுக்களுக்கு இடையேயான கருத்து முரண்பாட்டின் அடுத்த நிலையே தகராறு. ஆக, தகராறு முற்றும்போது தீர்வு என்று ஒன்று உருவாகும். சமாதானம் அல்லது சண்டை என்ற நிலையில் இருந்து முடிவாக என்ற சொல்லுக்கு தீர்ப்பு என்ற வார்த்தையே சரியானதாக இருக்கும். அப்படி தீர்ப்பு தருபவர் யார்? அவர் சொல்லும் தீர்ப்பு நடுநிலையானதா? யார் பக்கம் நின்றாவது தீர்ப்புச் சொல்லப்படுகிறதா? தகராறுகளுக்கு நிவாரணம் என்ன? பேச்சுவார்த்தை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? என்பதைப்பற்றி எல்லாம் சிறப்பாகவே சொல்கிறது இந்தப் புத்தகம். பொதுமக்களுக்கு எதிரான ஒரு தகராறில் அரசின் நிலைப்பாடு என்ன? மக்களுக்கு ஆதரவான நிலையையா அரசு எடுக்கிறது? இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்வது மட்டுமல்லாமல், சமாதான முயற்சி என்ற பெயரில் அரசின் கருத்துக்கள் திணிக்கப்படுவதை தோலுரித்துக் காட்டுகிறது இந்த அற்புதமான புத்தகம். ‘ஆராய்ந்துணர்தல்,முன்னறிவித்தல்,நிவாரணம்’ ஆகியவற்றைத் தேர்ந்து, தகராறுகளை எப்படி மாற்றி அமைத்துக்கொள்வது, சமாதானத்தை எப்படி உருவாக்குவது என்பது பற்றித் தெரிந்து கொள்ள இந்நூல் பெரிதும் உதவும். உலககின் பெரும்பான்மையான நாடுகளில் தகராறு என்னும் சொல் ‘ஹலோ’ சொல்வது போலாகிவிட்டது. நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள் குறிப்பாக, பக்கத்து நாற்காலியில் உட்கார்ந்து பணிபுரிபவரிடமிருந்து தொடங்கி & பக்கத்து தெருவரை, அண்டை மாநிலம் தொடங்கி & அண்டை நாடுவரை யாரிடம் நாம் தகராறு செய்யவில்லை? யார் நம்மிடம் தகராறுக்கு வரவில்லை?! எதற்காக தகராறுகள் உருவெடுக்கின்றன? தீர்வுக்கு வழிதான் என்ன? என்று நீங்கள் கேட்டால் அத்தனைக்கும் பதில் உண்டு இந்தப் புத்தகத்தில். கடந்து சென்றிடும் வழிவகையையும், அதை மாற்றியமைத்திடும் நெறிமுறையையும் தருகிறார் பேராசிரியர் யொஹான் கால்டுங். தமிழ் வாசகர்களுக்காக இந்தப் புத்தகத்தை மொழிமாற்றம் செய்து தந்திருக்கிறார் சுப.உதயகுமார். அவருடைய எளிமையான மொழிநடை வாசிப்புக்குச் சுவை கூட்டுகிறது. இன்றைய சூழலில் வாசிக்கத் தேவையான புத்தகம் இதுவே. ஏனெனில் காதல் தகராறுகள், கணவன்&&மனைவி தகராறுகள், சாதி தகராறுகள், அரசுக்கு எதிரான தகராறுகள் என தகராறுசூழ் தருணத்தில் உலாவரும் நம் நெஞ்சுக்கு நீதி சொல்கிறது இந்தப் புத்தகம். வாசித்துப்பாருங்கள். எந்த தகராறும் உங்களிடம் நெருங்காது

தகராறு - Product Reviews


No reviews available