தமிழர் மானிடவியல்

0 reviews  

Author: பக்தவத்சல பாரதி

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  450.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

தமிழர் மானிடவியல்

பக்தவத்சல பாரதி அவர்கள் எழுதியது 
 

கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் மனிதர்கள், மனித நடத்தைகள். சமூகங்கள் பற்றி அறிவியல்பூர்வமாக ஆய்வது மானிடவியல் சமூக மானிடவியல் சமூக நடத்தைகளையும், பண்பாட்டு மானிடவியல் நெறிமுறைகள், மதிப்பீடுகள் உள்ளிட்ட கலாச்சார அர்த்தங்களையும் ஆய்வு செய்கின்றன.

இந்த நூலில் பக்தவத்சலபாரதி தமிழர் என்னும் இனத்தை மானிடவியல் நோக்கில் ஆராய்கிறார். இதற்காக ஆதி சமூக முறையையும் பண்டைத் தமிழ்ச் சமூக முறையையும் எவ்வாறு இருந்தன என்பதில் தொடங்கி தாய்வழிச் சமூகம், சாதி, சமூக மாற்றம், திருமணம் சடங்குகள், தெய்வங்கள், திருவிழா, கைவினைக்கலை, புழங்குபொருள், கிராமம்-நகரம், சென்னைத் தமிழ் போன்றவற்றுடன் சமகாலத் தமிழ்ச சமூகம் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பல்வேறு தலைப்புகளில் எளிய நடையில் நமக்குக் காட்சிப்படுத்துகிறார். இதன் மூலம் இந்த நூல் தமிழர் வாழ்வைப் புறநிலைப்படுத்திப் பார்க்க விரும்புவோருக்கு ஒரு கைநூலாகத் திகழ்கிறது; ஆய்வில் ஈடுபடுவோர் கட்டாயம் படிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது.

தமிழர் மானிடவியல் - Product Reviews


No reviews available