சிலுவையின் பெயரால்

0 reviews  

Author: ஜெயமோகன்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  320.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சிலுவையின் பெயரால்

கிறித்தவத்தை இரண்டுவகையாகப் பிரிக்கலாம்.கிறிஸ்துவுக்குப் பின்னர் மூன்று நூற்றாண்டு கழித்து ரோமப்பேரரசர் கானஸ்தன்தீன் அவர்களால் கூட்டப்பட்ட சரபகள் மூலம் திட்டவட்டமாக ஒருங்கமைக்கப்பட்ட கிறிஸ்தவம் ஒன்று.இன்றுள்ள எல்லாத் திருச்சபைகளும் அந்த அமைப்பில் இருந்து முளைத்து வந்தவையே.அவை கிறிஸ்துவை ஒரு இறைமகனாக மட்டுமே முன்வைக்கின்றன.அவர் விண்ணுலகுக்கு வழிகாட்டவந்தவர் என்று சொல்கின்றன. அவர் மட்டுமே ஒரே மீட்பர் என்று சொலலி மத ஆதிக்கத்தை உலகமெங்கும் கொண்டுசென்று பரப்ப முயல்கின்றன.இன்னொரு கிறித்தவம் உண்டு.அது ஞானவாத கிறித்தவம் எனப்படுகிறது.கிறிஸ்துவை ஒரு மாபெரம் ஞானகுருவாகக் கருதுவது அது. அவர் சொன்ன இறையுலகம் இந்த மண்ணிலேயே உருவாக்கப்படவேண்டியது என்று நம்புவது.கிபி 3ஆம் நூற்றாண்டுமுதல் 5ஆம் நூற்றாண்டுவரையிலான மத ஆதிக்க காலகட்டத்தில் ஞானவாத கிறித்தவத்தின் நூல்கள் அனேகமாக எல்லாமே வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டன. ஞானவாதிகள் கொன்றே ஒழிக்கப்பட்டார்கள்.ஆனால் வரலாறு அவற்றில் சில நூல்களின் சில பக்கங்களை விட்டுவைத்தது.பைபிளில் இருந்து விலக்கப்பட்ட புனித தாமஸ் எழுதிய நற்செய்தி மேரி மக்தலீன் எழுதிய நற்செய்தி போன்ற பல நூல்கள் பாப்பிரஸ் சுவடிகளாகக் கிடைத்தன.இவை கிபி 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.இந்நூல் அந்த ஞானவாத கிறித்தவ மரபின் வழியாக கிறிஸ்து என்ற மகத்தான மெய்ஞானகுருவை உள்வாங்கிக்கொள்ளும் முயற்சி.

சிலுவையின் பெயரால் - Product Reviews


No reviews available