இந்திய வரலாறு ஓர் அறிமுகம்

0 reviews  

Author: டி.டி.கோசாம்பி

Category: வரலாறு

Available - Shipped in 5-6 business days

Price:  500.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

இந்திய வரலாறு ஓர் அறிமுகம்

இந்திய வரலாறு பற்றிய மாபெரும் படைப்பு  'இந்திய வரலாறு ஓர் அறிமகம்.' இப்புத்தகத்தில் கருத்தைக் கவரும் வகையில் விரிவாக வழங்கப்பட்டுள்ள அடிப்படைச் சிக்கல்களின் தேர்வு, பகுப்பாய்வு, நவீன விளக்கமுறை, அறிவியல் சார்ந்த முறையியல் ஆகியவை இந்திய வரலாற்று ஆய்விற்குப் புதிய அணுகுமுறைக்கான அடிப்படையை வழங்குகிறது.

பேராசிரியர் டி.டி.கோசாம்பி புதிய பல கேள்விகளைக் கிளப்பியுள்ளார். பல கேள்விகளுக்குப் பிறரால் வழங்கப்பட்ட விடைகளுக்குக் கூடுதலான சான்றாதாரங்களைச் சேர்த்துள்ளார். அவர் முந்தைய பல தவறுகளைத் திருத்தியுள்ளார். ஆராய்வதற்குப் புதிய பல களங்களைத் திறந்து விட்டள்ளார்.அறிவியல் சார்ந்த வரலாற்றுச் சிந்தனைக்கு விமர்சன வழிகாட்டியாகப் பண்புரிவது இந்தப் புத்தகத்தின் அடிப்படை நோக்கங்களுள் ஒன்று. பருப்பொருளியல் அடிப்படையிலிருந்து தொடங்கும் சமூக, அரசியல், பொருளாதார வளர்ச்சியை அணுவதற்குரிய உயர்வான முறையியலை இந்தப் புத்தகம் கொண்டுள்ளது.

எஞ்சியிருக்கும் பதிவுகள், பழக்கவழக்கங்கள், நினைவுச் சின்னங்கள் பற்றிய பகுப்பாய்வின் மூலம் வாசகர்கள் கடந்த காலம் பற்றி ஒளி பெறுவதற்கு இந்தப் புத்தகம் வழிகாட்டுகிறது. அதே வேளையில், உறுதியான வரலாற்று வளர்ச்சியின் விளைவாய் நிகழ்காலம் இருப்பதையும் வெளிப்படுத்துகிறது. இந்தப் புத்தகம் வரலாற்றுக்கு முந்தைய பழங்குடிச் சமூகம் தொடங்கி நவின இயந்திரயுகம் வரையிலான அசைவுகள் பற்றிய ஆய்வில் சான்றாதரங்களை முழுமையாகச் சார்ந்திருக்கிறது; மிகப்பெரும் தகவல்குவியலை அளிக்கிறது. இதன் மூலம் சமகால வரலாறெழுதியலுக்கு ஈடிணையில்லாத பங்களிப்பைச் செய்கிறது.

 சான்று,அர்த்தம் ஆகியவற்றிற்கான இணைகூறமுடியாத தேடுதல் மூலம் அறிவியல் முடிவுகளைக் கொண்டுள்ள டி.டி.கோசாம்பியின் முதன்மையான படைப்புகளுள் ஒன்றாக விளங்கும் இந்தப் புத்தகம், அடிப்படையயில் சிரியதான மனத்தின் உயர்ந்த எண்ணக்கருத்தையும், சுவையான ஆய்வுச் சித்திரத்தையும் வழங்குகிறது. இந்திய வரலாறு பற்றிய இந்தப் படைப்பு உலக ஏற்பையும் மதிப்பையும் பெற்றுள்ளது என்ற கூற்று மிகையானதன்று

இந்திய வரலாறு ஓர் அறிமுகம் - Product Reviews


No reviews available